29.8.07

மது

இதழ்

தவம்

தீவில்..

13.1.07

வாழிய வையகம். !பொங்கட்டும் மகிழ்ச்சி.!

வாழிய வையகம். !பொங்கட்டும் மகிழ்ச்சி.!

இன்னா பழமைகள் போக்குவோம் போகியில்.!
இனிய புதுமைகள் ஏற்போம் தையினில்.!


வானம் வசப்படும் உள்ளம் பெறுவோம்.!
உள்ளம் அதிலே வானம் நிறைப்போம்.!
சுருங்கும் மனதினை சுட்டு எரிப்போம் !
சுழலும் பூமியைக் காதல் கொள்வோம்.!


மகிழ்வித்து மகிழும் மகிழ்ச்சி காண்போம் !
நெகிழும் இதயத்தில் நேசம் சேர்ப்போம் !
பொங்கும் மகிழ்ச்சி எங்கும் தங்க
தங்கத் தமிழில் வாழ்த்து சொல்வோம்.!


பொங்கல் வாழ்த்துகள்.

6.1.07

விழியில் கவிதை


கொஞ்சும் விழி

கொஞ்சும் விழியிரண்டு உனக்கு..!

கெஞ்சும் விழியிரண்டு எனக்கு..!

கொஞ்சலும், கெஞ்சலுமாய்

நான்கு கண்களில் ஒரே காட்சி.
உரசல் இல்லாமல்
பற்றிய தீப்பொறி..!